மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் + "||" + Anganwadi workers protest demanding action against Vilathikulam Child Development Project Officer

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விளாத்திகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் டெய்சி, மாநில செயலாளர் சரசுவதி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.


கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில், விளாத்திகுளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாக பேசி வருகிறார். ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் மாதம் தோறும் கட்டாய வசூல் செய்கிறார். ஊழியர்களிடையே மோதல் போக்கை தூண்டி வருகிறார். ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வர வேண்டும் கவுன்சிலர் வலியுறுத்தல்
அவினாசி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் போது அரசுத் துறை அதிகாரிகள் கட்டாயம் வர வேண்டும் என்று கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
2. தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மீனவர்களின் உயிரிழப்பு வேதனை தருகிறது என்றும், தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
3. வீட்டுமனை வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
வீட்டுமனை வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4. காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
5. அம்பேத்கர் நினைவு நாளில் தாதர் சைத்ய பூமியில் கூட்டம் கூடவேண்டாம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6-ந் தேதி தாதர் சைத்யபூமியில் கூட்டம் கூட வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.