மாவட்ட செய்திகள்

டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம் + "||" + Relatives protest as body of worker killed in tractor collision placed in front of owner's home

டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்

டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்
டிராக்டர் மோதி பலியான தொழிலாளியின் உடலை, டிராக்டர் உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிரான் (வயது 45). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று தம்பிரான், தனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். கூவத்தூரை அடுத்த நெற்குணப்பட்டு கிராமம் அருகே வந்தபோது, பவுஞ்சூரை அடுத்த காதராப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.


இதில் படுகாயம் அடைந்த தம்பிரான், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தம்பிரான் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிணத்துடன் போராட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், தொழிலாளி தம்பிரான் உடலை, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் உரிமையாளரான சங்கர் வீட்டின் முற்றத்தில் வைத்து நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், ரேவதி மற்றும் மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. கவினா, செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், டிராக்டர் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அவரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளி உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
2. டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. பஞ்சாப்பில் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டம்
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு உயர்வால் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் 10 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.