கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றம் தென்மேற்கு ரெயில்வே தகவல்


கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றம் தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2020 4:10 AM IST (Updated: 23 Oct 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

பெங்களூரு,

மத்திய ரெயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் 362 பயணிகள் ரெயிலை, எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்ற அனுமதி அளித்து உள்ளது. அதன்படி கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில், எக்ஸ்பிரசாக மாற்றப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

பல்லாரி-உப்பள்ளி இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள்(வண்டி எண்:-51411/51412), யஷ்வந்தபுரம்-மைசூரு இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள்(56215/56216), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சிவமொக்கா டவுன் இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள்(56227/56228), சேலம்- யஷ்வந்தபுரம் இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56241/56242), அரிசிகெரே- உப்பள்ளி இடையே இயங்கும் ரெயில் (562734), தாளகொப்பா-மைசூரு இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56275/56276), சிக்கமகளூரு-யஷ்வந்தபுரம் இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் (56277/56278), பெங்களூரு கன்டோன்மெண்ட்- விஜயவாடா இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் (56503/56504), காரைக்கால்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56512/56513)

37 ரெயில்கள்

கே.எஸ்.ஆர்.பெங்களூரு-உப்பள்ளி இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள்(56515/56516), சோலாப்பூர்-தார்வார் இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் (56903/56904), சோலாப்பூர்-உப்பள்ளி இடையே இருமார்க்கமாக செல்லும் ரெயில்கள்(56905/56906), கே.எஸ்.ஆர்.பெங்களூரு- உப்பள்ளி இடையே இருமார்க்கமாக செல்லும் ரெயில்கள் (56911/56912), கே.எஸ்.ஆர்.பெங்களூரு-உப்பள்ளி இடையே இருமர்க்கமாக செல்லும் ரெயில்கள் (56913/56914),

கே.எஸ்.ஆர்.பெங்களூரு-சிவமொக்கா டவுனுக்கு இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56917/56918), சன்னப்பட்டணா-கோலார் இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் (76525/76526), மங்களூரு-மட்கான் இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56640/56641), மடகான்-மங்களூரு இடையே இருமார்க்கமாக செல்லும் ரெயில்கள் (70105/70106), மங்களூரு- கோழிக்கோடு இடையே இயங்கும் ரெயில்(56654), மங்களூரு-கோயம்புத்தூர் இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்கள் (56323/56324) ஆகிய 37 பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story