பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து காரைக்காலில் பாரதீய ஜனதா கட்சியினர் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்,
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து காரைக்காலில் பாரதீய ஜனதா கட்சியினர் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரைசேனாதிபதி தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் அருள்முருகன், ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் நிரவி செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராதா அப்பாதுரை, வடக்குத் தொகுதி தலைவர் சுரேஷ்கண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு கருத்து தெரிவித்த அவரை கைது செய்யவேண்டும், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story