திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2020 2:21 AM GMT (Updated: 26 Oct 2020 2:21 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றின் பாதிப்பு கடந்த சில மாதங்களாக 200-ஐ நெருங்கியே வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு பாதிப்பு உள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஒருவர் பலி

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பலியும் அவ்வப்போது உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகினர்.

அதன்படி திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 63 வயது ஆணுக்கு சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக இருந்ததை தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 177-ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 பெண்கள் அடங்குவர். 

Next Story