மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 6:00 AM GMT (Updated: 29 Oct 2020 6:00 AM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில், 

அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும், களஉதவியாளர் மற்றும் கணக்கீட்டாளர் போன்ற காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் செல்வதாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் இர்வின்தாஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Next Story