பெரம்பலூர், அரியலூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூர், அரியலூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 29 Oct 2020 11:22 PM GMT (Updated: 29 Oct 2020 11:22 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 125 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 125 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,356 ஆக உயர்ந்துள்ளது.

Next Story