கரூரில் இருந்து 2-வது முறையாக சரக்கு ரெயில் மூலம் ஒடிசாவிற்கு கொசுவலைகள் அனுப்பி வைப்பு


கரூரில் இருந்து 2-வது முறையாக சரக்கு ரெயில் மூலம் ஒடிசாவிற்கு கொசுவலைகள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2020 5:01 AM IST (Updated: 2 Nov 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், டெக்ஸ்டைல், பஸ் கூண்டு கட்டும் தொழில், மட்டுமல்லாமல் கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் சிறப்புற்று விளங்கும் நிலையில் இதன் மூலம் பல ஆயிரக்கணக்காக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருவதுடன் அந்நிய செலவாணியை ஈட்டி தரும் தொழிலாகவும் விளங்கி வரும் நிலையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொசுவலைகள் தமிழகத்ததில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப்பிரேதேசம், பீகார், மேற்கவங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மக்களும் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட உற்பத்தி பொருட்கள் எடுத்து சென்று விற்பனை செய்வதிலும், புதிதாக உற்பத்தி செய்யவும் முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து தொழிற் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

2-வது முறையாக கொசுவலைகள் அனுப்பி வைப்பு

இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொசுவலைகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு அதன் உற்பத்தியாளர்கள் தயாராகி வந்தனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கொசுவலைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு, கரூர் ரெயில் நிலையத்திற்கு மொத்தமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து 48 பெட்டிகள் இணைக்கப்பட்ட தனி சரக்குரெயில் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரெயில் நிலையத்திற்கு கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.47 லட்சத்து 8 ஆயிரம் லாபம் ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் 2-வது முறையாக நேற்றும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கொசுவலைகள் லாரிகள் மூலம் கரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கரூர் ரெயில் இருந்து தனி சரக்கு ரெயிலில் 523 டன் கொசுவலைகள் ஏற்பட்டு ஒடிசா மாநிலம் குர்தாரோடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.21 லட்சத்து 9 லட்சம் லாபம் ஏற்பட்டு உள்ளது.

Next Story