புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 25 பேருக்கு கொரோனா


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 25 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Nov 2020 11:47 PM GMT (Updated: 4 Nov 2020 11:47 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் நேற்று 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 688 ஆக உயர்ந்தது. அவர்களில் 10 ஆயிரத்து 339 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். நேற்று 4 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 149 ஆக உள்ளது.

அரிமளம்

அரிமளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரிமளம் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 22 பேருக்கும், கீழாநிலைக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 பேருக்கும், ராயவரம் பகுதியை சேர்ந்த 30 பேருக்கும், கடியாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 26 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் கர்ப்பிணிகளும் அடங்குவர்.

Next Story