பராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2020 12:12 AM GMT (Updated: 6 Nov 2020 12:12 AM GMT)

பராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், 

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் மூலம் அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன. மேலும் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக வரும்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தடுப்பணையை பார்வையிட வருவார்கள்.

இதனால் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணை அருகே பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் புலி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளின் பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் இருந்தன.

கோரிக்கை

இதனால் தடுப்பணையில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாததால், முட்புதறாக மாறிவிட்டது. பூங்காவில் இருந்த பொம்மைகள் உடைந்துள்ளன. ஊஞ்சல் போன்ற குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மற்றும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே தடுப்பணை பூங்காவை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story