கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2020 4:48 PM IST (Updated: 8 Nov 2020 4:48 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம், 

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை வட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வாசு வரவேற்றார். மாவட்ட தலைவர் இளவரசன் தொடங்கி வைத்தார். செயலாளர் தமிழ்வாணன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் அந்துவன்சேரல், முன்னாள் மாநிலச் செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக இளைஞர்களின் நலன் கருதி வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய அரசாணை வெளியிட வேண்டும். நாகையில் விவசாயிகள் நலன் கருதி நெல் உலர்த்தும் ஆலை அமைக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அரசு அறிவித்தப்படி ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாகையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல ரெயில் சேவை தொடங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் தங்களது மையங்கள் வாயிலாக உணவு வழங்கிய போது ஏற்பட்ட கூடுதல் செலவீன தொகையை வழங்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story