உடல் நலக்குறைவு மந்திரி தனஞ்செய் முண்டே ஆஸ்பத்திரியில் அனுமதி
மந்திரி தனஞ்செய் முண்டே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டிய சமூக நீதித்துறை மந்திரியாக இருப்பவர் தனஞ்செய் முண்டே (வயது 45). தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உடல்நிலை சீராக உள்ளது
இது குறித்து தனஞ்செய் முண்டே நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “கடந்த சில நாட்களாக நான் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டேன். இதையடுத்து நான் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். தற்போது உடல் நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு பிறகு விரைவில் மக்கள் பணியை தொடருவேன்“ என்றார்.
தனஞ்செய் முண்டே ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story