பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்ட குறைப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
விருதுநகர்,
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற 16-ந் தேதி திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில் பெற்றோரும், எதிர்க்கட்சியினரும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 9-ந் தேதி கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் இதுவரை பாடத்திட்ட குறைப்பு குறித்து பள்ளி கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆதலால் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். எனவே பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பது செய்யப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்களை பொறுத்தமட்டில் பாடத்திட்ட குறைப்பது செய்யப்பட்டாலும் போட்டி தேர்வுகளுக்கு அவர்கள் தயாராக வேண்டிய நிலையில் பாடத்திட்டம் முழுவதையும் அவர்கள் கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இருந்தபோதிலும் பாடத்திட்டத்தை குறைத்தால் அவர்கள் இறுதி தேர்வுக்கு தயாராவதில் சிரமம் எதுவும் இருக்காது. எனவே பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து கல்வியாளர்கள் கலந்தாலோசித்து தாமதமின்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு, பள்ளிக்கு சென்று கற்க வேண்டிய வாய்ப்பு அவர்களுக்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை நம்பி உள்ள நிலையில் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பள்ளிக்கல்வித்துறை தாமதமில்லாமல் பாடத்திட்டம் குறைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
Related Tags :
Next Story