நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது பரபரப்பு வாக்குமூலம்


நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 19 Nov 2020 10:35 PM IST (Updated: 19 Nov 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை,

பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் சரஸ்வதி (வயது 25.) நர்சிங் கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தபோது, அங்கு வந்த அவருடைய அண்ணன் நல்லையா என்ற குட்டிதாஸ் (30) திடீரென்று சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட் டிக் கொலை செய்தார்.

பின்னர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் சென்று சரணடைந்த குட்டியை போலீசார் கைது செய்தனர். கைதான குட்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பணம் தர மறுத்ததால்...

என்னுடைய தங்கை சரஸ்வதி நர்சிங் கல்லூரியில் படித்தபோதே, அவருக்கு தையல் கலை தெரிந்ததால், ஓய்வுநேரத்தில் துணிகளை தைத்து விற்பனை செய்தார். மேலும் கவரிங் நகைகளையும் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் அவர் படிக்கும்போதே அதிகளவு பணமும் சம்பாதித்ததால் என்னை மதிப்பது இல்லை.

மேலும் சரஸ்வதி அடிக்கடி செல்போனில் சிலரிடம் பேசிக் கொண்டே இருந்தார். இதனைக் கண்டித்ததால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சரஸ்வதியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்ததுடன் என்னை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் தங்கை என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன்.

இவ்வாறு கைதான குட்டி வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் குட்டியை போலீசார் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story