பாந்திராவில் மகனின் சண்டையை விலக்க முயன்றவர் குத்தி கொலை 5 பேர் கைது
பாந்திராவில் மகனின் சண்டையை விலக்க முயன்றவர் கத்தியால் குத்தி படுகொலை செய் யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை பாந்திரா சித்தார்த் நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஷப் மோகிதே (வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் வாக்மாரேவுக்கும் (21) சம்பவத்தன்று இரவு சிறிய பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இந்தநிலையில் மோகன் வாக்மாரேவின் தந்தை துல்ஜிராம் சண்டையை விலக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் மோகிதே மற்றும் அவரது கூட்டாளிகள் வாலிபரின் தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
5 பேர் கைது
இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரின் தந்தையை கொலை செய்த தாக ரிஷப் மோகிதே (33), ரோகித் ஜாதவ் (20) , அபிஜித் (19) , அங்கித் (20) , சுரஜ் ஆகிய 5 பேரை கைது செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story