விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 Nov 2020 4:38 AM IST (Updated: 29 Nov 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கைகால்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், விலையில்லா மோட்டார் பொருத்திய நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதனை பெற விரும்பும், பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள், 55 வயதிற்கு உட்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, அரசு ஊழியர்களின் பணிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் அல்லது தபால் மூலம் வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story