3 மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


3 மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2020 3:24 AM GMT (Updated: 30 Nov 2020 3:24 AM GMT)

மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட் டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு 60 அடியாக உயர்ந்தது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவ கங்கை மாவட்ட முதல்போக மற்றும் ஒருபோக பாசனத் திற்காக 70 நாட்களுக்கும் மேலாக கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அது தற்போது முறைப்பாசனமாக அமல்படுத் தப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினா டிக்கு 1,269 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு

அதன்படி வைகை அணை யில் இருந்து இன்று (திங்கட் கிழமை) முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 7 நாட்களுக்கு ராம நாதபுரம் மாவட்டத்திற்கு 1,093 மில்லியன் கனஅடியும், சிவகங்கை மாவட்டத்திற்கு 449 மில்லியன் கனஅடியும், மதுரை மாவட்டத்திற்கு 250 மில்லியன் கனஅடியும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதற் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் வருகிற 6-ந்தேதி வரையிலும், டிசம்பர் 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையில் சிவகங்கை மாவட்டத்திற்கும், 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மதுரை மாவட்டத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று காலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து ஆற்றுப் படுகை வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றங் கரையோர மக்கள் பாது காப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,515 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு வினாடிக்கு 1,269 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 3,789 மில்லியன் கனஅடியாக இருந்தது.


Next Story