சம்பளம் குறைத்ததை கண்டித்து கருப்பு பட்டை அணிந்த பொறியாளர்கள்


சம்பளம் குறைத்ததை கண்டித்து கருப்பு பட்டை அணிந்த பொறியாளர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2020 10:18 AM IST (Updated: 30 Nov 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர்கள் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் பொறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து அலுவலகம் முன் நின்று கோஷம் எழுப்பினார்கள்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு 6-வது ஊதிய குழுவில் வழங்கப்பட்ட ஊதியத்தில் தற்போது ரூ.15 ஆயிரம் வரை குறைத்து வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதை கண்டித்தும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை குறைக்காமல் வழங்க கோரியும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர்கள் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் பொறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து அலுவலகம் முன் நின்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் முழுமையான சம்பளம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story