அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 4:28 AM IST (Updated: 2 Dec 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள 550-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஐம்பது வாக்காளர் களை சந்தித்து அவர்களுடைய வாக்குகளை தவறாமல் தேர்தல் காலங்களில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது பணியை சிறப்பாக செய்தால் கடந்த முறை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரியலூர் தொகுதியில், இந்த முறை 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். நான் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்று எந்த உறுதியும் கூறவில்லை. அ.தி.மு.க. அரசு வாக்காளர்களிடம் உறுதியளித்து தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த நான்காண்டுகளில் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதியில் பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளை கொண்ட மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். முதல்-அமைச்சரிடம் பலமுறை நான் வற்புறுத்தி கேட்டு மருத்துவ கல்லூரியை பெற்றுள்ளோம். ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் தரமாக போடப்பட்டுள்ளன. பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம், திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங் களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறோம். தி.மு.க.வினர் பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். என்ன சொன்னாலும் அவர் கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க. மா பெரும் வெற்றி பெற்று தமிழகத்தை இந்தியாவில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும், என்றார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், பால் உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story