மாவட்ட செய்திகள்

கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பலி + "||" + An old woman was killed while trying to remove a power line that was cut in front of her house near Keelappaluvoor

கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பலி

கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பலி
கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமியின் மனைவி சிவபாக்கியம்(வயது 60). பொன்னுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார்.

இதையடுத்து சிவபாக்கியம் அவரது மகன் ரெங்கராஜ் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று பெய்த தொடர் மழையால் அவரது வீட்டிற்கு முன்பு சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது.


அப்போது வெளியே வந்து பார்த்த சிவபாக்கியம், அது வேறு ஏதோ ஒரு கம்பி என்று நினைத்து அதனை அகற்ற முயன்றார். அவர் மின்கம்பியை கையில் தொட்டவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து அக்கம், பக்கத்தினர் கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிவபாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓமனில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி
ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
2. பெருவில் பஸ் சாலையில் கவிழ்ந்து 20 பேர் பலி
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.
3. முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி.
4. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: அச்சக ஊழியர் பலி
திருவாரூரில் மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதியதில் அச்சக ஊழியர் உயிரிழந்தார்.
5. செங்கல்பட்டில் கஞ்சாவுடன் திரிந்த 2 பேர் கைது
செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் செங்கல்பட்டு டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.