தா.பழூர் பகுதியில் பலத்த மழை: பாசன ஏரிகள் நிரம்பின 65 வீடுகள் சேதம்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பாசன ஏரிகள் நிரம்பின. இதுவரை 65 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தா.பழூர் பகுதியின் மிகப்பெரிய ஏரியான சுத்தமல்லி ஏரி விரைவாக நிரம்பி வருகிறது. நேற்று காலையில் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. படிப்படியாக குறைந்து மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 250 கன அடியாக இருந்தது. சுத்தமல்லி அணையின் மொத்த கொள்ளளவான 226.80 மில்லியன் கன அடியில் இதுவரை 65 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
வழக்கமாக பருவமழை காலங்களில் ஓரிரு நாட்கள் மழை பெய்தாலே நிரம்பிவிடும் சுத்தமல்லி அணை இந்த ஆண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் மழை பெய்தும் இதுவரை அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை. இதற்கு வரத்து வாரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வீடுகள் சேதம்
பாசன ஏரிகளான காரைக்குறிச்சி பெரிய ஏரி, கோவைத்தட்டை ஏரி, சித்தேரி ஆகியவை விரைவாக நிரம்பி வருகின்றன. காசுடையான் ஏரி, அணைக்குடி ஏரி, சுக்கிரன் ஏரி, பூவோடை ஏரி ஆகிய பாசன ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தா.பழூர் கிராமத்தில் 8 வீடுகளும், சோழமாதேவி கிராமத்தில் 5 வீடுகளும், வாழைக்குறிச்சி கிராமத்தில் 5 வீடுகளும், கோடாலிகருப்பூர் கிராமத்தில் 7 வீடுகளும், காரைக்குறிச்சி கிராமத்தில் ஒரு வீடும், நாயகனைப்பிரியாள் கிராமத்தில் 2 வீடுகளும், உதயநத்தம் கிராமத்தில் 2 வீடுகளும், கோடங்குடி கிராமத்தில் 4 வீடுகளும், தென்கச்சிபெருமாள் நத்தம் கிராமத்தில் 13 வீடுகளும், அனைக்குடம் கிராமத்தில் 7 வீடுகளும், இடங்கன்னி கிராமத்தில் 11 வீடுகளும் என மொத்தம் 65 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. வீடுகளை இழந்தவர்கள், சேதம் அடைந்த வீட்டை சேர்ந்தவர்கள் மழை முடியும் வரை முகாம்களில் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story