தொடர் மழையால் மக்காச்ேசாளம் பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
தொடர் மழையால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சாலியமங்கலம்,
தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 40 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் இந்த பகுதியில் மக்காச்சோளம் பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
மக்காச்சோளம் கதிர்கள் மழையில் சாய்ந்து, வயலிலேயே முளைத்து வீணாகி விட்டதாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இளம் சோள கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி விட்டதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தரம் குறைந்தது
வழக்கமாக மக்காச்சோளம் பயிரில் ஏக்கருக்கு 80 மூட்டைகள் அளவு விளைச்சல் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ஏக்கருக்கு 15 மூட்டைகள் அளவு மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு கிலோ மக்காச் சோளத்துக்கு ரூ.20 கிடைத்து வந்தது.
தற்போது மழையால் தரம் குறைவான மக்காச்சோளத்தை மட்டுமே அறுவடை செய்ய முடிந்ததால் கிலோவுக்கு ரூ.8-க்கு விலை கேட்கிறார்கள். மக்காச் சோளத்துக்கு பயிர்க்காப்பீடு கிடையாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story