காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 30 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 27 ஆயிரத்து 527 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 431 பேர் உயிரிழந்துள்ளனர். 225 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 732 பேர் உயிரிழந்துள்ளனர். 486 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 719 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 439 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 665 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
Related Tags :
Next Story