செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 74 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 74 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 7:27 AM IST (Updated: 17 Dec 2020 7:27 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 47 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 733-ஆக உயர்ந்தது. 499 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 819 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 444 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 666 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 260-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 27 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 432 பேர் உயிரிழந்துள்ளனர். 233 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story