பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2020 9:30 AM IST (Updated: 18 Dec 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

பூதலூர் வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்காட்டுப்பள்ளி, 

பூதலூர் வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அடைக்கலம் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சார்லி தேவப்பிரியம், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், ஜூலியட் கீதா பாய், டேனியல் ராஜ் குமார், ரம்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பூதலூர் வட்டார செயலாளர் சதீஷ் வரவேற்றார். வட்டார பொருளாளர் தனசேகர் நன்றி கூறினார்.

Next Story