செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி


செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2020 5:40 AM IST (Updated: 19 Dec 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் தொழிற்சாலை பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்ற செஞ்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது (32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது நண்பருடன் சென்னை வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரத்துக்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story