மணமேல்குடி பகுதியில் நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மணமேல்குடி பகுதியில் சூரைநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணமேல்குடி,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வந்ததுடன் பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர். தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் விவசாயிகள் மெல்ல, மெல்ல மீண்டு வருகின்றனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் நோய் தாக்கம் காரணமாக விவசாயிகள் மீண்டும் நஷ்டத்தி்ற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அந்தவகையில், மணமேல்குடியை அடுத்த மணலூர், கார்க்கமலம், வெள்ளூர் மற்றும் பல்வேறு வருவாய் கிராமங்களில் காலம் தவறி மழை பெய்ததால் பயிர்கள் காய்ந்தன. ஓரளவு தாக்குப்பிடித்த பயிர்கள் நிவர் மற்றும் புெரவி புயல்களால் அதிக மழை பெய்ததால் சூரைநோய் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்கியுள்ளன. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
இழப்பீடு
மேலும், விவசாய பணிகளுக்காக வங்கியில் வாங்கிய கடனை எப்படி ெசலுத்துவது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆட்கள் கூலி, உரம், பூச்சி மருந்து செலவு என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாங்கள், தற்போது பயிர்களில் சூரைநாய் தாக்கியுள்ளதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்க வேண்டும், மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story