கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமை: கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர்
கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் சில்வர் பீச்சில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கடலூர்,
கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளது. இந்த பீச்சில் பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடுவர். இங்குள்ள கடற்கரை மணலில் அமர்ந்து சீறி பாயும் கடல் அலையை ரசிப்பார்கள். சிலர் கடலில் குளித்தும் மகிழ்வர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாலை நேரத்தில் இங்கு வந்து தான் பொழுதை கழிப்பார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடலூர் சில்வர்பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் வர கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த 7-ந்தேதி முதல் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில்வர்பீச்சுக்கு மக்கள் வரத்தொடங்கினார்கள்.
கடற்கரையில் குவிந்தனர்
மக்கள் வருவதற்கு அனுமதி அளித்த பின்னர் வந்த, முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று என்பதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 4 மணிக்கே சில்வர் பீச்சுக்கு வாகனங்களிலும், நடந்தும் ஏராளமான மக்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தனர். சிறுவர்கள் அங்குள்ள கடற்கரை மணலில் ஓடி விளையாடினர். பெரும்பாலானோர் சீறி வந்த கடல் அலையில் கால்களை நனைத்தும், குளித்தும் மகிழ்ந்தனர். சிலர் கடற்கரை மணலில் அமர்ந்து கடல் அலையை ரசித்ததோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் உற்சாகமடைந்தனர்.
மழைநீர்
சிறுவர் விளையாட்டு பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் கடைகள் இருக்கும் இடத்தில் போடப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சென்று சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்கனவே இந்த மழைநீரை அகற்ற வேண்டும் என்று நகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இது வரை நகராட்சி அதிகாரிகள் அந்த மழைநீரை அகற்ற முன்வரவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் இதை கவனத்தில் கொண்டு அங்கு தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story