“தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்” நெல்லை அருகே மாதிரி கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
“தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும். பின்னர் மக்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்“ என்று நெல்லை அருகே கங்கைகொண்டானில் நடந்த மாதிரி கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
நெல்லை,
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தலைப்பில் நேற்று நெல்லையில் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள அரசு சட்டக்கல்லூரிக்கு வந்தார். அங்கு அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கனிமொழி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு நெல்லை சந்திப்புக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நெல்லை டவுன் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கங்கைகொண்டானில் நடந்த மாதிரி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தி.மு.க. ஆட்சி
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், “எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் சரியாக வேலை கிடைக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள சிறுகுளம் நிறையவில்லை. அதற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும். பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்து கனிமொழி எம்.பி. பேசும்போது, “இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக முதியோர் உதவித்தொகை சரியாக கிடைக்கவில்லை. புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் எதுவுமே இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். அதைப்பற்றி இந்த ஆட்சிக்கு அக்கறையே இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும். அதன்பிறகு உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்“ என்றார்.
ஆட்டோவில் பயணம்
பின்னர் கனிமொழி எம்.பி. நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவுக்கு வந்தார். அங்கு கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் சலவை தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அங்குள்ள சிறுவர்கள் பூங்கொத்து கொடுத்து கனிமொழி எம்.பி.யை வரவேற்றனர். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறையை பார்வையிட்டார்.
அதன்பிறகு அங்கிருந்து பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு சென்ற அவர் காய்கறி வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஆட்டோ மூலம் சமாதானபுரம் சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அங்கிருந்து நெல்லை சந்திப்பு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த அவர் கல்வியாளர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது கல்வியாளர்கள், “நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்“ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்“ என்றார்.
நல்லாட்சி
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்கியவர் எல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது. யார் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய ஒரே கட்சி தி.மு.க. மட்டும்தான்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் நிறைவடையும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் நல்லாட்சி அமைய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அவர்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். இனிமேலும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உற்சாக வரவேற்பு
நெல்லை வந்த கனிமொழி எம்.பி.க்கு பட்டாசு வெடித்தும், கரகாட்டம், நையாண்டி மேளம் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லட்சுமணன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரசார பொதுக்கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி. இரவில் மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது விவசாயிகளுக்கு செய்த துரோகமாகும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை பார்த்து அறிக்கை நாயகன் என்று கூறுகிறார். ஆனால். எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாயகனாக உள்ளார். மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை கொண்டு வந்து பணம் சுருட்டுகின்றனர் பணத்தைக் கொண்டு வெற்றி பெற நினைக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது. பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 2,500 கொடுக்கிறார்கள். அவர்கள் 25 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு போடும் கணக்கு தப்பு, அ.தி.மு.க. அரசும் தப்புக்கணக்கு போட்டு உள்ளது, தமிழ் மொழியை, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து ஆட்சியை தக்க வைக்கலாம் என அ.தி.மு.க. தப்புக் கணக்குப் போட்டுள்ளது. 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story