அரியலூரில் 3 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு


அரியலூரில் 3 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 4:17 AM IST (Updated: 28 Dec 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,629 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 4,549 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 172 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாவட்டத்தில் 2,255 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,232 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 218 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story