பாளையங்கோட்டையில் மாநாடு: "எந்த சூழ்நிலையிலும் சமூக நீதியை விட்டுத்தர மாட்டோம்" காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு
"எந்த சூழ்நிலையிலும் சமூக நீதியை வி்ட்டுத்தர மாட்டோம்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாது. ஏனெனில் நாம் உண்மையையும், சமூக நீதியையும் மக்களுக்காக பேசுகிறோம்.
பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரைக் கேட்டாலே சிலர் பயந்து நடுங்குகின்றனர். அதேபோன்று அண்ணா, கருணாநிதியின் பெயரைக் கேட்டாலும் பயப்படுகிறார்கள். இவர்கள் அறிவாயுதத்தை தவிர வேறு எந்த ஆயுதமும் வைக்கவில்லை. உண்மையை கேடயமாக வைத்திருந்தனர்.
சமூகநீதியை புதைக்கும் பா.ஜனதா
ஒரு இயக்கத்துக்கு அறிவும், உண்மையும் தவிர வேறு எதுவும் தேவையில்லை. இந்த அறிவியக்கமாம் திராவிட இயக்கம் தமிழக மக்களுக்கு அளித்த கொடைதான் சமூக நீதி. திராவிட இயக்கம் உருவாக அடித்தளமே சமூக நீதி என்ற கொள்கைதான்.
இந்த சமூகநீதி கொள்கையை புதைப்பதற்கு மத்திய பா.ஜனதா அரசு குழி தோண்டுகிறது. இதனை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க. அரசும் குற்றவாளிதான். ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கும் அரசாக மத்திய பா.ஜனதா அரசு செயல்படுகிறது. நீட் தேர்வு மூலமாக சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விட்டார்கள்.
விட்டுத்தர மாட்டோம்
இட ஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக அகற்றி விட வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் கொள்கை. அதை படிப்படியாக செய்து வருகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் சமூக நீதி, இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை. ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வடைய தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கி.வீரமணி
முன்னதாக காணொலி காட்சி மூலம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சமூக நீதிதான் தந்தை பெரியாரின் முதல் குறிக்கோளாக இருந்தது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. தமிழகத்தில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். சமூகநீதி மீது கைவைப்பவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் சமூக நீதியை காக்க வேண்டுமென்றால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு தலைப்புகளில்...
தொடர்ந்து ‘சமூக நீதி என்பது யாதெனில்' என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதியும், ‘கருப்பு என்பது சட்டை இல்லை. வரலாற்றின் சாட்டை' என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பனும், ‘சமூக நீதியும், சிறுபான்மையினரும்' என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ‘சமூக நீதியும், விளிம்புநிலை மக்களும்' என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசினாா்கள்.
மாநாட்டில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். மாநாட்டிற்கு மூத்த பெரியார் சிந்தனையாளர் அரியமுத்து தலைமை தாங்கினார். மாநாடு ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் வரவேற்று பேசினார். விழா ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சூரிய சேவியர் அறிமுக உரையாற்றினார்.
எம்.எல்.ஏ.க்கள்
மாநாட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அப்துல் வகாப், துரை, எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பூங்கோதை, தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகி அய்யாத்துரை பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாலபிரஜாதிபதி அடிகள், நவாஸ்கனி எம்..பி.
நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம், தென்காசி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மாவட்ட செயலர் காசி விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட தலைவர் கரிசல் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story