தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் மக்களை சந்திக்கும் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனாங்கூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் வீரபத்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில மருத்துவ அணி இணை செயலாளரும். முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் லட்சுமணன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பற்றி மக்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றார். தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவது, அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் ஊழல், மக்கள் விரோத செயல்கள் குறித்து பொதுமக்களிடையே திண்ணை பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் சவுந்தர்ராஜன், விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் மணவாளன், நிர்வாகிகள் ஆனாங்கூர் மணி, முருகவேல், தவமணி, செல்வி, அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் கிளியனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் நேசல் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். மாவட்ட நிர்வாகிகள் குழந்தைவேலு, கலைமணி, முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி பேசினர். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவேந்திரன், கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, வேலாயுதம், ஏழுமலை, திராவிடமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் பிடாரிப்பட்டு ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்களை சந்திக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி கலந்துகொண்டு மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பற்றி மக்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று கையெழுத்து போட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து பிடாரிப்பட்டு, திருநந்திபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story