காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அரசு பள்ளியில் 805 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அரசு பள்ளியில் 805 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 30 Dec 2020 2:55 AM IST (Updated: 30 Dec 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பாண்டில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஸ்ரீபெரும்புதூர், மதுரமங்கலம், தண்டலம், மாத்தூர், பண்ருட்டி மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 805 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட துணை செயலாளர் போந்துர் செந்தில்ராஜன், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வேளாண் விற்பனை சங்க துணைத்தலைவர் போந்துர் சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story