நிவாரண தொகை, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


நிவாரண தொகை, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2020 4:37 AM IST (Updated: 31 Dec 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கும், இடிந்த வீடுகளுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். புதுச்சாவடி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும், ஜே.ஜே.நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். குளறுபடி நிறைந்த வறுமைக்கோட்டு பட்டியல் கேட்பதை கைவிட்டு, உழவர் அட்டை உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி, மனிதநேய மக்கள் கட்சி சாகுல்ஹமீது, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோசப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் ம.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story