300 ரூபாய்க்காக தொழிலாளியை கொன்ற 2 பேர் கைது


300 ரூபாய்க்காக தொழிலாளியை கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 12:53 AM GMT (Updated: 2020-12-31T06:23:56+05:30)

300 ரூபாய்க்காக தொழிலாளியை தாக்கி கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத், 

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது35) . தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த ராகுல் ரத்தன் (28) என்பவரிடம் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை பார்த்து வந்த மனோஜ் தனக்கு வரவேண்டிய பாக்கி தொகை ரூ.300-ஐ ராகுல் ரத்தனிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மனோஜை கூட்டாளி பண்டி சாப்லே (26) என்பவருடன் சேர்ந்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் உயிரிழந்து கிடந்தவரை கண்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொ டர்பாக விசாரணை நடத்தியதில் 300 ரூபாய்க்காக 2 பேர் சேர்ந்து தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பே ரை கைது செய்தனர்.


Next Story