20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ம.க.வினர் போராட்டம்


20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ம.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2020 5:14 AM GMT (Updated: 31 Dec 2020 5:14 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் பா.ம.க. வினர் போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி,

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பா. ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், ராமு, இளைஞர் அணி துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கே.பி.பாண்டியன் கண்டன உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பன், அய்யாகண்ணு, அன்பரசு, மணிக்கண்ணு, நகர தலைவர் மணிகண்டன், செயலாளர் கராத்தேமணி, பசுமைதாயக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நகர அமைப்பு செயலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் சக்கரபாணி, மணி, சின்னதுரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பகண்டை கூட்டுரோடு

அதேபோல் பகண்டை கூட்டு ரோட்டில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அமுதமொழி தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் அமுல்ராஜ், சங்கர், மணி, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மணிகண்டன், மருத்துவர் அணி செயலாளர் ராஜா, தலைவர் வெங்கடாசலம், மகளிரணி செயலாளர் விருத்தம்பாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் புற்று மாரியம்மன் கோவிலில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக சென்று ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் சங்கர், துரைசாமி, அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாநில துணை அமைப்பு தலைவர் செந்தில்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், தங்கராசு, ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் சக்திவேல், பா.ம.க. இளைஞரணி செயலாளர் தன்ராஜ், தொண்டரணி செயலாளர் கதிரவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பழனிசாமி, இளைஞரணி நிர்வாகி பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

அதேபோல் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் லோகநாதன், வேல்முருகன், துணைத்தலைவர்கள் கோவிந்தராஜ், என்.பழனிவேல், ராஜா, இளைஞர் அணி தலைவர் த.லோகநாதன், மகளிரணி செயலாளர் அஞ்சுகம், நகர செயலாளர் ஜெகன், வன்னியர் சங்க செயலாளர் பிரபு, அமைப்பு செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், மணிவண்ணன், அறிவழகன், தலைவர்கள் பழனிவேல், ராஜேந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவு கவியரசு, வன்னியர் சங்க துணை தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சின்னசேலம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, தமிழ்மணி, சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில மகளிர் அணி செயலாளருமான காசாம்பு பூமாலை, சமூகநீதிப் பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சிவராமன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக சின்னசேலம் காந்தி பொது மேடை அருகில் இருந்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் வக்கீல்கள் அண்ணாதுரை, சவுந்தர்ராஜன், மாவட்ட வன்னியர் சங்கத முன்னாள் தலைவர் காசி, மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய முன்னாள் செயலாளர் அண்ணாமலை, இளைஞரணி புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மணம்பூண்டி

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் சரவணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், சரத்குமார், பெருமாள், சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட முன்னாள் செயலாளர் செழியன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குமரகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், வக்கீல் ராஜ்குமார், கொள்கை பரப்பு செயலாளர், சுடரொளி சுந்தர், மாவட்ட தொண்டர் அணி நிர்வாகி கீழையூர் முத்துக்குமரன், மாநில நிர்வாகி டெல்லி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி முருகன் நன்றி கூறினார்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ராஜ்குமார், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கேபிள் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசக்தி, திருக்கோவிலூர் தொகுதி செயலாளர் சரவணகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாநில நிர்வாகி டெல்லி சேகர், மாவட்ட தொண்டரணி நிர்வாகி முத்துக்குமரன், இளைஞரணி நிர்வாகி கவுதமன், நிர்வாகிகள் பிரபு, சத்யா, சரவணன், கொள்கை பரப்பு செயலாளர் சுடரோலி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Next Story