கவுண்டமணி-செந்தில் வாழைப்பழக் காமெடி போல மினி கிளினிக் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
கவுண்டமணி-செந்தில் வாழைப்பழக் காமெடிபோல மினி கிளினிக் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கருத்து மற்றும் கலந்துரையாடல் நடந்தது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியால் பட்ட அவலங்கள் குறித்து 11 பேரை பேச அனுமதித்தனர். அவர்கள் பேசியதாவது:-
நந்தினி: கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை கூலி உயர்வு செய்யப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கூலி உயர்வு செய்ய வேண்டும்.
ஸ்ரீவர்த்தினி: நான் நன்றாக படிக்கும் மாணவி. எனது அக்காள் 10-ம் வகுப்பில் 484 மதிப்பெண்கள், பிளஸ்-2வில் 1084 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் அவர் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் மருத்துவம் படிக்கும் கனவு கலைந்து போனது. எனவே எங்களைப்போன்ற விவசாய கூலித்தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம் படிக்க வசதியாக நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.
தேவையான உதவி
ரூபாவதி: கடந்த 10 ஆண்டுகளாக சரியான வேலைவாய்ப்புகள் இல்லாமல் பலரும் வாடி வருகிறார்கள். இந்தநிலையில், கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். அப்போது தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா என்ற திட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். சிறிது நேரத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி எங்களை தொடர்பு கொண்டு விசாரித்தார். சில மணி நேரத்தில் அந்த பகுதி தி.மு.க.வினர் எங்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை கொடுத்து உதவினார்கள்.
இதுபோல் மொத்தம் 11 பேர் பேசினார்கள்.
மினி கிளினிக்
இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் தந்தது தலைவர் கலைஞரின் அரசு. ஆனால் 30 நாட்களை கடந்து தலைநகர் புதுடெல்லியில் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மத்திய பா.ஜனதா அரசு உள்ளது. தமிழக அரசும் மத்திய அரசை ஆதரித்து வருகிறது.
மினி கிளினிக் என்கிற திட்டத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால், அதை செயல்படுத்தும் முறை மக்களை ஏமாற்றுவதாக இருக்கிறது. மினி கிளினிக் டாக்டர்கள் யார்? செவிலியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்று கேட்டால், தமிழக அரசு கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியாக பதில் அளிக்கிறது. அதாவது மினி கிளினிக் டாக்டர்கள் எங்கே என்று கேட்டால் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களை கை காட்டுகிறார்கள். ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களே முறையாக செயல்படவில்லை என்ற நிலையில் மினி கிளினிக் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நூல் பதுக்கல்
ஜவுளித்தொழிலை மீட்க வேண்டும் என்று அந்த தொழில் சார்ந்தவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். பஞ்சு விலை உயர்வு இல்லாவிட்டாலும், நூல் பதுக்கல் காரணமாக விலை உயர்வு ஏற்படுகிறது என்பதை தெரிவித்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூல் பதுக்கல் தடை செய்யப்படும். ஜவுளித்தொழில் வளர்ச்சியில் புதிய சகாப்தம் உருவாக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தி, தினசரி ஊதியம் உடனடியாக அன்றைய தினமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை ஓர வஞ்சனை இன்றி கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்கும் வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பெற்ற கல்விக்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.6 லட்சம் கோடி கடன்
கரெப்சன், கமிஷன், கலெக்சன் என்ற கொள்கையுடன் செயல்படும் அ.தி.மு.க.ஆட்சி இன்னும் 4 மாதங்களில் அகற்றப்படும். கஜனாவை காலி செய்து ரூ.6 லட்சம் கோடி கடனை பெற்று வைத்திருக்கும் ஆளும் அ.தி.மு.க., பெண்களுக்கு பாதுகாப்பை தராத, சட்ட ஒழுங்கை சீரழித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று 3 முறை உரக்க சொல்லச்சொல்ல கூடி இருந்த பெண்கள், தி.மு.க. தொண்டர்கள் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று கோஷம் எழுப்பினார்கள். இதுபோல் தி.மு.க.வை ஆதரிப்போம் என்றும் அவர் சொல்ல அனைவரும் திரும்ப கூறினார்கள்.
மரியாதை
முன்னதாக நேற்று காலை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்த அவர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து வாகனம் மூலம் சென்னிமலை ரோட்டில் பயணித்து வெள்ளோடு சென்றார். வழி நெடுகிலும் பொதுமக்கள் அவரை பார்த்து கைகளை அசைத்தனர். குமராவலசு ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிநகர் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு சென்ற அவர் அங்கு தி.மு.க. சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள பொது நூலகத்தை திறந்து வைத்தார்.
அங்கிருந்து மக்கள் கிராமசபை கூட்ட அரங்குக்கு வந்தார். கூட்ட அரங்கம் தென்னை மர தோப்பில் இயற்கை மாறாமல் அமைக்கப்பட்டு இருந்தது.
கருணாநிதி உருவச்சிலை
இதுபோல் மேடை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலை வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மைக்கில் பேசிக்கொண்டே பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதியில் நடந்து சென்று அவர்கள் மத்தியில் பேசினார். இதனால் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் கரூர் புறப்பட்டு சென்றார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. ப.சச்சிதானந்தனம், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் அ.செந்தில்குமார், சின்னையன், செல்லப்பொன்னி மனோகரன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, அவைத்தலைவர் குமார் முருகேஸ், மாநில வக்கீல் அணி துணை அமைப்பாளர் எம்.அருட்செல்வன், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம், இளைஞர் அணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஈ.ஆர்.சிவக்குமார், பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கே.பி.சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பால் சின்னச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஆர்.திருமலை, திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளி.பிரகாஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் டி.சி.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு கவுன்சிலர் நவபாரதி, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி.கே.கோகுல், சமூக வலைதள பொறுப்பாளர் காஞ்சி லோகேஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story