காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு கிராமத்தில் ரூ.7½ கோடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க கட்டப்படும் கிடங்கு; மாவட்ட கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் தேர்தல் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் வண்ணம் புதிய பாதுகாப்பு கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்காக கடந்த 2019-2020-ம் ஆண்டில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 971 சதுர அடி பரப்பளவில் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் கிடங்கில் வாக்கு சேகரிக்கும் எந்திரம் (ஏ.வி.எம்), வாக்களிப்பதை உறுதி செய்திடும் எந்திரங்கள்(விவிபேடு), வாக்கு கட்டுபாட்டு எந்திரம் ஆகியவற்றை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைக்கப்படும்.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு கிடங்கின் கட்டுமானப் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெடக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






