தா.பேட்டை அருகே பயங்கரம்: தாயை அடித்துக்கொன்ற மகன்கள் பணம் கேட்டு தராததால் ஆத்திரம்
தா.பேட்டை அருகே டிராக்டருக்கு டிப்பர் வாங்க பணம் தராததால் பெற்ற தாயை அடித்துக்கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை,
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே மகாதேவிவயலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). விவசாயி. இவரது மனைவி நாகரத்தினம் (65). இவர்களின் மகன்கள் பிரபாகரன் (42), பிரகாஷ் (40). இதில் பிரபாகரனுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இருவரும் கூலிவேலை செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளனர். இதனால் அண்ணன், தம்பி இருவரும் தங்களது டிராக்டருக்கு புதிதாக டிப்பர் வாங்க திட்டமிட்டனர். இதுதொடர்பாக நாகரத்தினத்திற்கும், அவருடைய மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
அடித்துக்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ், பிரபாகரன் ஆகியோர் தனது தாயிடம் டிப்பர் வாங்க பணம் கேட்டுள்ளனர். அப்போது, அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரகாஷ், பிரபாகரன் ஆகிய இருவரும் தங்களது தாயை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மகன்கள் கைது
பின்னர், நாகரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், நாகரத்தினத்தின் மகன்கள் பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெற்ற தாயை மகன்களே கொலை செய்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story