காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது


காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2021 11:53 PM GMT (Updated: 9 Jan 2021 11:53 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்கப்படு்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் மேவலூர் குப்பம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்ற சென்னையை அடுத்த பாடிபுதூர் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Next Story