கும்மிடிப்பூண்டி அருகே முன்விரோதத்தில் தம்பதிக்கு வெட்டு; வாலிபர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே முன்விரோதத்தில் தம்பதிக்கு வெட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2021 5:32 AM IST (Updated: 10 Jan 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள என்.எம்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜான்சன் (வயது40).

இவருக்கும் பக்கத்து வீடான இளையராஜா (37) என்பவருக்கும் இடையே கால்வாயில் மழைநீர் செல்வது தொடர்பாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஜான்சன் மற்றும் அவரது மனைவி தாட்சாயிணி (32) ஆகிய 2 பேரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை நேற்று கைது செய்தனர்.

Next Story