பாறைப்பொடி கடத்தியதை தடுத்ததால் தாசில்தார் வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ டிரைவர் கைது


பாறைப்பொடி கடத்தியதை தடுத்ததால் தாசில்தார் வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2021 10:20 AM IST (Updated: 10 Jan 2021 10:20 AM IST)
t-max-icont-min-icon

பாறைப்பொடி கடத்தியதை தடுத்ததால் தாசில்தார் வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ டிரைவரை, 2 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே குலசேகரபுரம் பகுதியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா சென்றார். அப்போது அந்த வழியாக பாறை பொடி ஏற்றி கொண்டு டெம்போ ஒன்று வந்தது. உடனே தாசில்தார் டெம்போவில் சோதனை செய்ய, தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால் டிரைவர் டெம்போவை நிறுத்தாமல், தாசில்தார் வாகனத்தின் மீது மோதி விட்டு வேகமாக சென்றார். உடனே தாசில்தார் அந்த டெம்போவை 2 கி.மீ. தூரம் வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்தார்.

டிரைவர் கைது

அப்போது எந்த வித அனுமதியுமின்றி பாறை பொடி ஏற்றி சென்றது தெரிய வந்தது. அந்த டெம்போவை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த உசுரவிளையை சேர்ந்த டிரைவர் பீட்டரையும் (வயது 36) பிடித்து அஞ்சுகிராமம் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், வாகனத்தை சேதப்படுத்தியது, அனுமதியின்றி பாறைப்பொடி கொண்டு சென்றதாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து பீட்டரை கைது செய்தனர்.

Next Story