மீன்சுருட்டி அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு


மீன்சுருட்டி அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Jan 2021 4:30 AM IST (Updated: 15 Jan 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி கடந்த அதன் முழு கொள்ளளவை எட்டியது.

மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி கடந்த அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியில் இருந்து 360 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தற்போது பொன்னேரியில் இருந்து 940 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கருவாட்டு ஓடை வழியாக சென்று அணைக்கரையில் இருந்து வரும் வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு செல்கிறது.
1 More update

Next Story