அரியலூர்- பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


அரியலூர்- பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 16 Jan 2021 11:52 PM GMT (Updated: 2021-01-17T05:22:40+05:30)

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர், 

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவினால் மொத்தம் 4,460 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,580 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 185 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,260 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 2,238 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 152 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story