கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Jan 2021 4:16 AM GMT (Updated: 2021-01-17T09:46:14+05:30)

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில், 

கன்னியாகுமரி லூர்துமாதா தெருவைச் சேர்ந்தவர் மேரி ஸ்டானிஸ்டா (வயது20). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாகவே மேரி ஸ்டானிஸ்டா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் மேரி ஸ்டானிஸ்டா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மேரி ஸ்டானிஸ்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story