அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


ஆயுதக்களம் கிராமத்தில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதையும், மிளகாய்ச்செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் படத்தில்
x
ஆயுதக்களம் கிராமத்தில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதையும், மிளகாய்ச்செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் படத்தில்
தினத்தந்தி 18 Jan 2021 2:52 AM IST (Updated: 18 Jan 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

ெதாடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம் (வடக்கு) (தெற்கு), உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிர்கள் பென்னேரி பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல்கதிர்கள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் கதிர்களில் உள்ள நெல்மணிகள் மீண்டும் முளைத்தும் வீணாகியுள்ளது.

இதேபோல் சம்மங்கி, கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் வீணாகி கருகியும், கடலை செடிகள் முளைக்காமலும் உள்ளன. எனவே இந்த பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரமப்படும் விவசாயிகள்
மேலும் கொரோனா ஊரடங்கு, புரெவி மற்றும் நிவர் புயல், மழை என பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் பார்வையிடுவதை அதிகாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் மழையை நம்பியும், பொன்னேரி பாசனம் மூலமும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலங்களையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு 
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story