அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா


கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
x
கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
தினத்தந்தி 21 Jan 2021 2:44 AM IST (Updated: 21 Jan 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

கரூர்,

தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று இடஒதுக்கீடு ஆணையை பெற்றவர்கள், கல்லூரிகளுக்கு சென்று ஆணையை அளித்து முதலாம் ஆண்டில் சேர்ந்தனர். கொரோனா தொற்று பரவலால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. 

அதன்படி நேற்று கரூர் காந்திகிராமத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனையொட்டி கல்லூரி அரங்கி்ல் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்திருந்தனர்.

தொடக்க விழாவிற்கு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். மேலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி டீன் அசோகன் ரோஜாப்பூ வழங்கி வரவேற்று, அறிவுரைகளை வழங்கினார். மேலும் புதிதாக வந்த மாணவ, மாணவி்களை மூத்த மாணவர்கள் வரவேற்றனர். 

முதலாம் ஆண்டு வகுப்பில் 87 மாணவிகள், 63 மாணவர்கள் என மொத்தம் 150 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 10 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இடஒதுக்கீல் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கேரளா, ராஜஸ்தான், பீகார், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Next Story