மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு + "||" + Final voter list released in Kanchipuram and Chengalpattu districts

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

மேலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 462. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 73 ஆயிரத்து 685, இதர வாக்காளர்கள் 182 என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்.டி.ஓ., நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வருவாய் ஆர்.டி.ஓ. வித்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேற்று வெளியிடப்பட்டன இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 லட்சத்து 46 ஆயிரத்து 543 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 69 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள், இதரர் 384 என மொத்தம் 27 லட்சத்து 16 ஆயிரத்து 385 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர, தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என கலெக்டர ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 465 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.