திருவள்ளூர் மாவட்டத்தில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், தினேஷ் ஆகியோருடன் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பூச்சிஆத்திபேடு கிராமம், லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களான தனசேகரன் (21), மணிகண்டன் (21), மதன் (24), சந்துரு (20) ஆகியோர் சேர்ந்து கொண்டு முன்விரோதத்தில் சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சதீஷ் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அந்த 4 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story