கரூரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தற்கொலை
x
தற்கொலை
தினத்தந்தி 21 Jan 2021 9:08 AM IST (Updated: 21 Jan 2021 9:08 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கருத்து வேறுபாடு காரணமாக புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பெண் தற்கொலை
கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 46). இவரது மகள் திலகவதி (25). இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திலகவதிக்கும், விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திலகவதி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட திலகவதி நேற்று முன்தினம் தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திலகவதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த கரூர் டவுன் போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் திலகவதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story